
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான விளையாடினார். இந்திய அணியின் கேப்டனாகவும் கருதப்படுகிறார். ஐபிஎல்-லில் குஜராத் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த சீசனில் குஜராத் அணிக்கு கோப்பையை வெல்லும் முனைப்போடு தயாராகி வருகிறார். இந்த நிலையில் தான் கிரிக்கெட் விளையாட சச்சின் தான் காரணம் என்று கூறியுள்ளார். தன்னுடைய சிறுவயதில் சச்சினுக்கு எதிராக வலைப்பயிற்சியில் பந்து வீசியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “என்னுடைய தந்தையோடு 3, 4 போட்டிகளில் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. ஐபிஎல்லில் 3 அல்லது நாலாவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக்காக அங்கு வந்தபோது எனக்கு ஒன்பது பத்து வயது இருக்கும். அப்போது சச்சின் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட என்னிடம் இருக்கிறது. நான் அவருக்கு எதிராக பந்துகளை வீசினேன். நான் கிரிக்கெட் விளையாட தொடங்குவதற்கு அவர்தான் காரணம். என் தந்தை அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்னுடைய தந்தைக்கு போஸ்டர்களில் அதிக ஆர்வம் கிடையாது. இருந்தாலும் எங்கள் கிராமத்தில் சச்சினுக்காக போஸ்டர் வைத்தார்” என்று கூறியுள்ளார்.