சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரியும் பாலாஜி நேற்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு அவருடைய தற்போதைய நிலை குறித்து வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது சிகிச்சையில் இருக்கும் பாலாஜி முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 வருடங்கள் தான் இருக்கிறது எனவும் அந்த காலத்தில் தொடர்ந்து கலைஞர் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தான் பணிபுரிந்து வந்த மருத்துவமனையில் தொடர்ந்து சேவை செய்ய விரும்புவதாகவும் இதற்கு அனுமதி கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் பாலாஜி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த தகவலை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.