
தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு படங்களின் நடிக்கவில்லை தற்போது படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பாக காதல் காட்சிகள், பாடல், நடனம் என சிம்பிளான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போது திருமணத்திற்கு பிறகு பெண்களை மையப்படுத்திய மிகவும் தரமான கதைகளை தேர்ந்தேடுத்து தேர்வு செய்து நடித்து வருகிறார் .
இந்நிலையில் ஜோதிகா குண்டாக காணப்பட்ட நிலையில் மூன்று மாதங்களில் ஒன்பது கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அவருடைய எடை இழப்பிற்கு உதவியாக இருந்தது ஊட்டச்சத்து நிபுணர்கள் தானாம். அந்த குழுவினரை தன்னை அறிமுகப்படுத்தியதற்காக வித்யா பாலனுக்கு நன்றி தெரிவித்தார். ஊட்டச்சத்து நிபுணர் குழுவினரின் உதவியாளர் சரியான உடற்பயிற்சி மேற்கொண்டதால் ஜோதிகா உடல் எடையை குறைத்துள்ளார்.