
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று மதுரைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, ரகு தாத்தா ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம். இதைப் பற்றி தமிழ்நாட்டில் மட்டும்தான் பேச முடியும்.
இந்த படத்தில் நடித்துவிட்டு ஹிந்தி மொழியில் ஏன் நடிக்கிறீர்கள் என்று எதிர்ப்பு வந்தது. நான் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹிந்தி திணிப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் நடிகர் விஜய் உடன் நீங்கள் நட்பில் இருக்கிறீர்கள். அவர் தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். எனவே அவருடைய கட்சியில் ஏதேனும் பொறுப்பில் வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார். அதற்கு அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என்று எண்ணம் எனக்கு தோன்றலாம். ஒருவேளை வராமல் கூட போகலாம் என்றார். ஆனால் தற்போது அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறினார்.மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.