தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் திமுக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியதாக என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது அதனை மறுத்து x பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி உள்ள மகளிருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தான் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாக கூறினார். அதன் பிறகு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் விண்ணப்பிக்கும் நிலையில் அவற்றை பரிசீலனை செய்து தகுதியுள்ள ஒருவரை கூட விடாமல் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவது தான் இந்த அரசு நோக்கம் என்னும் கூறியுள்ளார். மேலும் முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று அமைச்சர் சொன்னதாக தகவல் பரவிய நிலையில் தற்போது அதனை அவர் மறுத்துள்ளார்.