பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் இவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை netflix பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக திருமண வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. பியாண்டு தி பெரி டேல் என்ற பெயரில் உருவாகும் அந்த வீடியோவின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. நவம்பர் 18-ஆம் தேதி திருமண வீடியோ நிகழ்வு ரிலீஸ் ஆகும் என netflix அறிவித்தது.

நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நானும் ரவுடிதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி பத்து ஆண்டுகள் கடந்த போதிலும் உங்கள் அவமானகரமான செயல்களை மறைக்கும் போலி முகமூடி அணிந்து சுற்றித் திரிய முடியாது. தயாரிப்பாளராக எனக்கு பெரும் வெற்றி அளித்த, மக்கள் இன்றும் கொண்டாடும் அந்த படத்துக்கு நீங்கள் கூறிய கடுமையான வார்த்தைகளை மறக்க முடியாது. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் என்றென்றும் மாறாது.

அந்த படத்தின் வெற்றியால் உங்களுக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பை சினிமா நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் காட்டி அதிருப்தி எந்த சாதாரண பார்வையாளருக்கும் தெளிவாக தெரிந்தது. எந்த துறையிலும் வணிக போட்டிகள் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது. அநாகரிகமான செயல்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட என காட்டமாக பதிவிட்டுள்ளார்.