மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை அனிகா. இவர் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் நானும் ரவுடிதான், மிருதன் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றார். சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது.

அந்த புகைப்படங்களுக்கு அடிக்கடி எதிர்மறையான விமர்சனங்களும் வரும். இந்த நிலையில் இவர் சமீபத்திய பேட்டியில், சினிமாவில் இருக்கும் நடிகைகள் இந்த மாதிரியான விமர்சனங்களை சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். நான் கிளாமராக ஆடை அணிவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.. தவறான விமர்சனங்கள் வருவது வாழ்க்கையின் ஒரு பகுதி. எப்படி ஆடை அணிந்தாலும் தப்பா பேசுறவங்க தப்பா தான் பேசுவாங்க. இருந்தாலும் சில தவறான விமர்சனங்கள் என்னை மிகவும் பாதிக்கும். நானும் மனுஷி தானே என்று கூறியுள்ளார்.