
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக இருந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு நியாயம் கேட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக இருக்கும் நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி உலா வந்துள்ளார். இவர் தன்னை வெளியுலகில் போலீஸ் என்பது போல் காட்டியுள்ளார். இவர் மாதம் ரூ.12000 சம்பளம் பெரும் நிலையில் போலீசாருக்கான எந்த சலுகைகளும் இவருக்கு கிடையாது.
இவர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் படுக்கை வசதி இல்லை எனில் அவர்களின் உறவினர்களிடம் பணம் பெற்று படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றை செய்துள்ளார். இவருடைய டீசர்ட் மற்றும் பைக் ஆகியவற்றில் கொல்கத்தா போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும் நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தபோது தான் செய்த குற்றத்திற்காக அவர் துளி கூட வருந்தவில்லை. அதற்கு மாறாக நீங்கள் விரும்பினால் என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். அவருடைய செல்போன் முழுவதும் ஆபாச படங்கள் மிகுந்து காணப்படுகிறது. இவருக்கு 4 முறை திருமணமானதாக கூறப்படுகிறது. மேலும் கெலைக்கு பின் தன்னுடைய இடத்திற்கு சென்று சஞ்சய் தூங்கிய நிலையில் தடயங்களையும் அழித்துள்ளார். இருப்பினும் அவருடைய காலணிகளில் மட்டும் ரத்தக்கரை இருந்தது. இவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஐகோர்ட் இன்று வழக்கில் முக்கிய உத்தர வினை பிறப்பிக்க இருக்கிறது.