தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாகுபலி 2 1000 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தது. இதேபோன்று ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படமும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.

இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ள நிலையில், அஜய் தேவகன், ஸ்ரேயா, ஆலியா பட் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டுக் கூத்து பாடலுக்காக அண்மையில் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததோடு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது.

அதன்பிறகு  அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பல்வேறு பிரிவுகளில் 3 விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் கோல்டன் குளோப் விருது கிடைத்த பிறகு நாட்டுக் கூத்து பாடலுக்கான மவுசு பலரது மத்தியிலும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனியா அமீர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.