இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் K.M செரியன். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு நேற்று இரவு 11:55 மணியளவில் செரியன் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவருடைய மகள் சந்தியா உறுதிப்படுத்தியுள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். கடந்த 1990 முதல் 1993 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் கௌரவ சிகிச்சை நிபுணராகவும் இருந்துள்ளார். மேலும் இவருக்கு தற்போது 82 வயது ஆகும் நிலையில் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.