நாடு முழுவதும் யுபிஐ சேவைகள் செயலிழந்ததால் கடந்த ஒரு மணி நேரமாக பயனர்கள் மிகவும் அவதிப்பட்டனர். போன் பே, கூகுள் பே, பேடிஎம் பயன்படுத்துவோர் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியாத நிலை ஏற்பட்டது. பலருக்கு பணம் பரிவர்த்தனை பாதியிலேயே நின்று போனதாக தகவல் வெளியானது.