நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த புதிய முறை அறிமுகமாகும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும். டோல் கட்டண முறைகேடுகளை தவிர்க்கவும் , பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.