
இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பாஜக அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. அதாவது முன்னதாக மசோதா நிறைவேற்றப்பட்ட போது எதிர்ப்புகள் கிளம்பியதால் பின்னர் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு பின்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிடம் நள்ளிரவு வரையில் விவாதம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு நிறைவேற்றப்பட்டு விட்டது.
இதைத்தொடர்ந்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை பரிசளித்த ஜனாதிபதி தற்போது அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று இரவு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதால் தற்போது நாடு முழுவதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா அமலுக்கு வந்துவிட்டது.