
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பைசரான் பள்ளத்தாக்கில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இந்தியா பெரும் சேதத்தை எதிர்கொண்டது. இதற்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு, பதிலடி நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அமிர்தசரஸ் உள்ளிட்ட இந்திய நகரங்களை தாக்க முயன்றது. ஜம்மு, குப்வாரா, ராஜோரி, பார் அமுல்லா (J&K), பதான்கோட், ஜெய்சல்மீர், கங்காநகர் ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
இந்த நிலையில், ஒரு இந்திய ராணுவ வீரர் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறும் வகையில், “நாங்கள் 45 நாள் விடுமுறைக்கு வந்திருந்தோம். ஆனால் நேற்று அழைப்பு வந்துவிட்டது. இதனால் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டோம் என்றார். அதற்குப் பிறகு அவர் சொன்ன வரிகள் பலரது நெஞ்சையும் நெகிழச் செய்தன: “நம்மை மீண்டும் பார்க்கமுடியுமா என்றால் உறுதி இல்லை. ஆனால் இந்தியாவுக்கு எதுவும் ஆகாது, அந்த உறுதி இருக்கு” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
View this post on Instagram
அவரது பேட்டியில், பேட்டியாளர் ஐஸ்கிரீம் குறித்து நகைச்சுவையாக, “அடுத்த ஐஸ்கிரீம் லாஹூரில தானா?” எனக் கேட்டபோது, வீரர் சிரித்தபடி பதிலளிக்கிறார், “அங்கதான் ஜூஸ் குடிப்போம்” என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. “Salute to our army”, “Wapas to milenge jarur bhai – Jai Hind”, “Coldest line ever”, “Pray for our soldiers” போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீரரின் தைரியமும், நாட்டுப் பற்றும், இளைஞர்களிடையே வீரத்தைப் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.