உத்திரபிரதேச மாநிலத்தில் தினேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஷ்மா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு அபிஷேக் ஷர்மா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சைவ உணவுகள் மட்டுமே இருந்தது. ஆனால் அசைவ உணவு வைக்காததால் மணமகள் குடும்பத்தினருடன் மணமகன் வீட்டார் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தினேஷ் ஷர்மாவை மணமகனின் தந்தை உட்பட குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். இதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிதடி ஆனது. பின்னர் திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில் மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில்  மணமகன் வீட்டார் வரதட்சணையாக ரூ.5 லட்சம் வாங்கியதாகவும் அசைவ உணவு இல்லை என்ற காரணத்திற்காக திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.