தமிழகத்தில் யாரையும் அரசாங்கம் குடிக்க சொல்லவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மது குடிப்போர் அதிகரித்துள்ளதாக சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது உண்மை அல்ல. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது அரசு இலக்காக இருந்தாலும் அதை உடனடியாக குறைக்க முடியாது. படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.