சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி நேற்று தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர்களின் வந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாகவும், இருப்பினும் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான்.

சீரான இடைவேளையில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததாலயே நாங்கள் பின்னடைவை சந்தித்தோம். காயம் காரணமாக கான்வே, பதிரனா, தீபக் சஹார் ஆகிய மூன்று வீரர்களும் விளையாடாதது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.