
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நாக சைதன்யா தன்னுடைய இரண்டாவது மனைவி சோபிதா துலிபாலாவோடு புகைப்படங்களை வெளியிட்டால் அதனை பார்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சோபிதா அளித்த பேட்டி ஒன்றில், தங்களுடைய காதல் தொடங்கியது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார்.
அதாவது, ஒருநாள் நான் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நீங்கள் ஏன் நாக சைதன்யாவை இன்ஸ்டாவில் பாலோ செய்யவில்லை என்று கேட்டார். அப்போது நான் அவருடைய இன்ஸ்டா கணக்கிற்கு சென்று பார்த்தேன். எனக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவர் என்னை ஏற்கனவே ஃபாலோ செய்திருந்தார். அவர் வெறும் 70 பேரை மட்டும் தான் பின்பற்றுகிறார். அதில் என்னுடைய கணக்கும் ஒன்று என்பது எனக்கு ஸ்பெஷலாக இருந்தது. அதன் பிறகு தான் நான் அவரிடம் பேசினேன். பின்பு தான் நாங்கள் காதலித்தோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் சோபிதாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.