நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன். இவர் இதற்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகவும், மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் பாஜகவில் பல பொறுப்புகளை வகித்துள்ள நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய சகோதரர் இல. கோபாலன் தற்போது காலமானார். அவருக்கு 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். மேலும் இவருடைய உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.