
திருவள்ளூர் மாவட்டம் நடுவூர் மாதா குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வருகின்றனர். சமீப காலமாக மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் மீனவ கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி பாதுகாப்பு பணிக்கு வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர்(24) என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அத்துமீறி ஒரு வீட்டிற்குள் நுழைந்து 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டதால் சுதாகர் அங்கிருந்து தப்பித்து சென்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.