
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த முகமது பைசல்(25) சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அதன் பிறகு அதில் போதை மருந்தை தயாரித்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதைக்கு உபயோகப்படுத்தியது உறுதியானது. அவர்களிடம் இருந்த போதை ஊசி மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.