
சென்னை மாவட்டத்தில் சில வாலிபர்கள் நேற்று இரவு பைக் ரேஸில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை, ஜிபி ரோடு ஆகிய பகுதிகளில் தடுப்பு அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு நேரம் சில வாலிபர்கள் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி பைக் ரேஸில் ஈடுபட்டனர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் வாகனத்தை இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தேனாம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ், போக்குவரத்து காவலர் ரோகித் ஆகியோர் வாலிபர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது பைக் காவலர்கள் மீது மோதியது. இதனால் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பைக் ரேஸில் ஈடுபட்ட 35க்கும் மேற்பட்ட வாலிபர்களை கைது செய்தனர். மேலும் 25 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.