உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அசோக் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், பிரபல யூடியூபரான சீதா மீனாவும், அவரது குடும்பத்தாரும் வசித்து வந்தனர்.

நேற்று இரவு 4 மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்து, சீதா மீனாவை துப்பாக்கியால் தாக்கி, நகைகள், பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Seeta.Scahan.ms (@seeta.sachan.ms)

இந்த சம்பவம் குறித்து சீதாவின் கணவர் மனோஜ் சச்சின் இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறியிருப்பதாவது, எங்கள் வீட்டில் கொள்ளை நடந்திருக்கிறது. எனது மனைவியை துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்.

ஆனால் போலீசார் இதை சாதாரணமாக கையாளுகின்றனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நால்வர் இருப்பதாக தகவல் கிடைத்தும் போலீசார் அதை மறைக்க முயற்சி செய்கின்றனர். ஒருவேளை அவர்கள் லஞ்சம் பெற்று இருக்கலாம் என மனோஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீதா மீனா, “நாளை காலை 11 மணிக்கு கடம்பூர் காவல் நிலையத்திற்கு வருகிறேன். எனக்கு ஆதரவாக இருக்க விரும்புபவர்கள் அங்கு வரவும்” என தனது சமூக வலைதளங்களில் உருக்கமாக கூறியுள்ளார்.

காவல்துறையினர் இதை தொடர்ந்து X தளத்தில் பதிலளித்து, “வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.