
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு குவாலியர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டெம்போ லாரி மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன் பிறகு விபத்தில் பலர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.