
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்தது. தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சி வசமாக விஜய் பேசினார்.
இந்த நிலையில் விஜய் திமுகவை திராவிட மாடலும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற சுயநல கூட்டம். அவர்கள் தான் நமது எதிரி என விமர்சித்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி சாலை படம் பார்த்தேன். நல்ல படம் 100 நாள் திரையரங்குகளிலும், கொஞ்ச நாளும் OTT-யிலும் ஓடும் என விமர்சித்துள்ளார்.
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’வாழ்த்துகள் @actorvijay !!
— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) October 27, 2024