
தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு வருடமும் 50 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கிய கௌரவித்து வருகிறார். சமீபத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.