
இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கடந்த மே 1-ம் தேதி திரையிரங்குகளில் ரீலீசானது. இந்த திரைப்படம் ரீலீசான நாள்முதல் இன்றுவரை படம் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இவருக்கு இதுதான் முதல் திரைப்படம். இந்த படத்தில் சசிகுமார்,சிம்ரன், மிதுன், ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் , எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இலங்கையில் இருந்து வந்த குடும்பம் சென்னையில் வாழும் வாழ்கையை மையமாக கொண்ட திரைகதையாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தை பற்றி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, இந்த திரைப்படம் அக்கம் பக்கத்தில் வாழ்பவர்களோடு மனிதாபிமானத்தோடு வாழும் வாழ்க்கையை பற்றி கூறுகிறது. இதனை தொடர்ந்து படத்தின் கதா நாயகனான சசிகுமார் தன்னுடைய நடிப்பில் இரக்கத்தையும், உதவும் குணத்தையும் மிகச் சிறப்பாக காட்டியுள்ளார்.
மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு எடுத்துக்காட்டாக “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என சுட்டிக்காட்டி கூறியுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் இயல்புடையவன் நான்.
இன்று குடும்பத்தினருடன் டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்தேன். படம் முடிந்த பின்பு நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குனர் அபிஷான் ஜீவன்ந்த் இருவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டையும் பரிமாறிக் கொண்டதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.