தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் கலைஞராக தனுஷ் இருக்கிறார் என்றால் அதற்கு செல்வராகவன் தான் காரணம், நடிப்பின் மீது ஆர்வம் இல்லாத தனுஷை துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமாக்கினார் செல்வராகவன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.  அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என செல்வராகவன் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.இப்படி  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியவர் தான் செல்வராகவன்.

பிஸியான நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவனின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஐயா படம் பார்த்தபோது நயன்தாரா மிகப் பெரிய ஹீரோயினாக வருவார் என்று சொன்னேன். என் தம்பி தனுஷ் கூட நான் சொன்னதை நம்பவே இல்லை.

ஆனால் தற்போது நயன்தாரா மிகப் பெரிய ஸ்டார் ஆகி இருக்கிறார். அதேபோல எதிர்நீச்சல் படம் பார்த்தபோது சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஸ்டாராக வருவார் என்று சொன்னேன். அதன்படி தற்போது முன்னணி ஹீரோவாக ஜொலித்து வருகிறார் என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் செல்வராகம் சொன்னது போல நயன்தாரா, சிவகார்த்திகேயன்  பெரிய ஸ்டாராக தான் இருக்கிறார்கள்.