
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரும் விக்னேஷ் சிவனும் 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ரௌடி தான்” படப்பிடிப்பின்போது ஒருவரையொருவர் காதலித்தார்கள். நீண்ட நாட்கள் காதலில் இருந்த பிறகு, 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அதே ஆண்டில் அவர்கள் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகியோரை வாடகைத்தாய் முறையில் பெற்றனர். தற்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தொடங்கும் முன்பாக அறிக்க ஒன்றை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. அதில், யாரும் தன்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவரை போல விஜய் டிவியின் பிரபலமான அறந்தாங்கி நிஷாவை எல்லோரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பார்கள். இந்த நிலையில் அவரும் தன்னை யாரும் இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.