
தமிழக அரசியலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் பற்றிய பேச்சு தான் அடிபடுகிறது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். இந்த நிலையில் சீமான் விஜயின் கட்சி கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழ் தேசியமும், திராவிடமும் எப்போதும் ஒன்றாக முடியாது. விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். திராவிடம் என்பது மக்களை பிளவுபடுத்தி பார்ப்பது. தமிழ் தேசியம் என்பது அனைத்தையும் மக்களையும் அரவணைத்து செல்வது.
75 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட அரசியலால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு போடுவது கொள்கை கூட்டம். நயன்தாரா கடை திறப்பதற்கு 4 லட்சம் பேர் கூடினார்கள். ஆகையால் கூட்டத்தைப் பற்றி பேசக்கூடாது. எனக்கு 36 லட்சம் மக்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். விஜய் காங்கிரஸ் பற்றியும், அதிமுக பற்றியும் விமர்சனம் செய்யாதது ஏன்? அதிமுக என்ன புனிதமான கட்சியா? அந்த கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர் தானே. அந்த கட்சியை பற்றி விஜய் ஏன் பேசவில்லை? மேடையில் ரைமிங்காக பேசினால் மட்டும் போதுமா என விமர்சித்துள்ளார்.