
சென்னையில் இன்று தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குகேஷின் உலக சாதனையை புகழ்ந்து பேசினார். உலக சாம்பியன் ஆக மாறுவதற்கு குகேஷ் 11 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும் அவரை தமிழக இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
அவரின் விடாமுயற்சி தமிழக இளைஞர்களை ஊக்கப்படுத்தும் என்றார். அதன் பிறகு குகேஷ் நம்ம சென்னை பையன் என்று பெருமிதமாக கூறினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலை குகேஷுக்கு வழங்கப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்த நிலையில் தமிழக அரசு உதவி செய்யாமல் தன்னால் இந்த வெற்றியை சாதித்திருக்க முடியாது என்று குககேஷ் பெருமிதமாக கூறியதோடு முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்தார். அதோடு தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டுக்கான Home of chess என்ற சிறப்பு அகடமி உருவாக்கப்பட்டு பல செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இந்தியாவில் உள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்று கூறினார்.
முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் குகேஷுக்கு வாழ்த்து கூறும்போது தெலுங்கு பையன் என்று கூறிய நிலையில் தற்போது நம்ம சென்னை பையன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது அவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் அமைந்துள்ளது.