
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாமா. இவர் தமிழ் சினிமாவில் எல்லாம் அவன் செயல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபரான அருண் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கௌரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் சமீபத்தில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தன்னுடைய கணவரை பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை பாமா திருமணம் குறித்து தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பெண்களாகிய நமக்கு எதற்கு திருமணம். நம்முடைய பணத்தை பறித்துக் கொண்டு நம்மை தற்கொலைக்கு தள்ளுவார்கள். அதன் பிறகு உங்களுடைய வாழ்க்கைக்குள் வருபவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறினார். மேலும் அவருடைய கருத்து சர்ச்சையான நிலையில் நடிகை பாமா வரதட்சனை கொடுத்து பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதை தான் அப்படி கூறியதாக விளக்கம் கொடுத்துள்ளார்.