
சென்னை மாவட்டம் மண்ணடியில் அக்ரம் ஜாவித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நிலோபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது தன் மனைவியை நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி ஜாவித் அவருடன் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருடைய 3 வயது குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக ஜாவித் தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் குழந்தையின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது ஜாவீத்தை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது குழந்தை பிறந்ததிலிருந்து தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட ஜாவித் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டு துன்புறுத்தியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தன்னுடைய மனைவிக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பர் இருக்கும் நிலையில் நாங்கள் இருவரும் கருப்பாக தான் இருக்கிறோம்.
அப்படி இருக்கையில் குழந்தை மட்டும் எப்படி நிறமாக பிறந்தது என்று ஜாவித்துக்கு சந்தேகம் வந்தது. இதனால்தான் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என எண்ணி கோபத்தில் ஜாவித் கொலை செய்துள்ளார். மேலும் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் வருகிற 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.