
இந்தூரில் பட்டியலினத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவனோடு வேலை தேடி உஜ்ஜையினிக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த தம்பதி அந்த பகுதியில் வேலை கேட்டுள்ளார்கள். அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உதவி செய்வதாக கூறி இருவரையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அந்த பெண்ணின் கணவரை கடைக்கு ரவி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது ரவியின் நண்பர் இம்ரான் அந்த வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் கடைக்கு சென்று இருந்த ரவி அந்த பெண்ணின் கணவரை அங்கே அமர வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து அந்த பெண்ணை அவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதிலிருந்து தப்பிக்க அந்த பெண், வெளியே சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அரை நிர்வாணமாக ஓடியுள்ளார்.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு உடுக்க ஆடை கொடுத்து உதவினார்கள். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் தப்பியோடி தலைமறைவாக இருந்த ரபி மற்றும் இம்ரானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.