
இந்திய தகவல் தொடர்பு சட்டம்,சிம் கார்டுகளின் வரம்பு குறித்த புதிய விதி யின்படி, ஒருவர் ஒன்பது சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். இதை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம், சிறை தண்டனை வழங்கப்படும். வேறொருவருடைய அடையாள ஆவணங்களைக் கொண்டு சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
நம்முடைய பெயரில் எத்தனை சிம்கார்டுகள் ஆக்டிவாக உள்ளது என்பதை அறிய மத்திய அரசு Sanchar Saathi என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் சென்று, மொபைல் எண்ணை பதிவு செய்து Not My Number, Not Required D Required என்ற மூன்று விருப்பத் தேர்வுகள் இருக்கும். இதில் நமக்கு தெரியாமலேயே நம்முடைய பெயரில் சிம்கார்டு ஆக்டிவாக இருந்தால் “Not My Number” என்பதை கிளிக் செய்து இணைப்பை துண்டிக்கலாம்.