
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருடைய அணி மூன்றாம் இடத்தை பிடித்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்தது. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் விஜய் மட்டும் வாழ்த்து கூறவில்லை என சர்ச்சை எழுந்தது. அதாவது விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் பாஜக போட்டி போடுவதாக கூறப்படும் நிலையில் விஜய்க்கு எதிராகத்தான் அஜித்துக்கு பத்ம விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு விஜய்யும் அஜித்துக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்தது சர்ச்சையாக மாறியது.
இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித்துக்கு முதல் முதலில் வாழ்த்து சொன்னதே விஜய் தான் என்று தற்போது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றது முதல் ஆளாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அஜித்துக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இதேபோன்று பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட போதிலும் உடனடியாக விஜய் அஜித்துக்கு போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரண்டு விஷயத்திலும் முதல் ஆளாக அஜித்துக்கு வாழ்த்து சொன்னதே விஜய் தான். அஜித்துக்கு விஜய் வாழ்த்து கூறவில்லை என்று வரும் தகவல்களில் துளி கூட உண்மை கிடையாது. இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் விஜய் மற்றும் அஜித் மிகவும் நட்பு உறவில் இருப்பது உறுதியாகியுள்ளது.