அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அதாவது ஐவா மாநிலத்தின் டெஸ் மோயின்ஸ் விமான நிலையத்திலிருந்து அனோகா கவுண்டி பிளைன் விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் அந்த விமானம் மின்னாபொலிச் நகரில் உள்ள 10792 கயில் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த  ஒருவர் உயிரிழந்துள்ளது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இன்னும் பலர் இருந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து ஏற்பட்டதும், விமானமும் வீடும் தீப்பற்றி எரிந்தது. சாட்டா TBM7 எனும் சிங்கிள் என்ஜின் விமானமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது என அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது. இது பற்றி ப்ரூக்லின் பார்க் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு தலைவர் ஷான் கான்வே தெரிவித்ததாவது, “நாங்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது வீடு முழுவதும் தீ பரவி இருந்தது” என்றார். வீடில் இருந்தவர்கள் அனைவரும் பிழைத்தனர் என்றாலும், வீடு முழுமையாக அழிந்து விட்டது என்றார். மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.