
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சையத் சமீர் (28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அலங்கார தொழில் செய்து வருபவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வழக்கம்போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடுரோட்டில் மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து வாலிபர் தப்பி ஓட முயன்ற நிலையில் விடாமல் அவரை துரத்தி சென்று கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தனர்.
இந்த வாலிபரை கத்தியால் குத்தியதில் அவர் சரிந்து கீழே விழுந்த நிலையில் கண்மூடித்தனமாக அடித்து உதைத்தனர். இதனை அப்பகுதியில் நின்றவர்கள் சுற்றி வேடிக்கை பார்த்ததோடு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தை யாரும் தடுக்காமல் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Mohammad Sameer brutally hacked, stabbed & killed in Hyderabad in full public view by mafia
Law & order situation in Telangana is in doldrums since Congress has taken over
Imagine if Sameer would have been killed like this in BJP ruled state then many would have reached UN… https://t.co/rTm4KitHOB pic.twitter.com/XNbdw6gGqW
— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind) June 14, 2024