
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள நேஷனல் ஹைவே 16-இல், ராமலிங்கேஸ்வர நகர் பைபாஸ் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடி, மதுபோதையில் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் காட்சி, சினிமா காட்சியை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
இந்த சம்பவத்தை பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு வாகன ஓட்டுனர் வீடியோ பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டார். குறுகிய நேரத்திலேயே வீடியோ வைரலாக, பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் “பொதுவெளியில் இப்படிப் பழகுவது எவ்வளவு அபாயகரமானது?” எனக் கேள்வி எழுப்ப, சிலர் “சாலையில் மற்ற பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, விஜயவாடா போலீசில் புகார் செய்யப்பட்டதால், அவர்கள் சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கினர்.
విజయవాడ రోడ్లపై గలీజ్ పనులు
మద్యం మత్తులో బైక్పై వెళ్తూ రొమాన్స్ చేసుకున్న జంట
విజయవాడ హైవే – రామలింగేశ్వర నగర్ ఫ్లై ఓవర్ వద్ద బైక్పై రొమాన్స్ చేస్తూ కెమెరాకు చిక్కిన జంట pic.twitter.com/GCKItHPe22
— Telugu Scribe (@TeluguScribe) May 18, 2025
போலீசார் தற்போது அந்த காதல் ஜோடியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கும், பொது இடத்தில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்துகொண்டதற்கும் எதிராகவும் பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.