அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானி அவசரமாக கடற்கரையில் விமானத்தை தரையிறக்கினார். இதில் விமானி மற்றும் பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் விமானம் பலத்த சேதமடைந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.