கடந்த மாதம் விமானம் குலுங்கிய விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது

லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக கடுமையாக குலுங்கியது. நடுவானில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த மாதம் விமானம் குலுங்கியதால் காயமடைந்த நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அறிவித்துள்ளது. மேலும் பயணிகள் அனைவருக்கும் விமான சீட்டுக்கான முழு தொகை திருப்பி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.