
சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் கடந்த ஐந்தாம் தேதி ஒரு கல்லூரி மாணவி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த மர்ம நபரை அடையாளம் கண்டனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.