
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி பிறகு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. அவருடைய வில்லித்தனமான நடிப்பு அனைவருடைய கோபத்திற்கும் ஆளாகும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்தார்.
அதன் பிறகு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் உருவ கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் ரவிந்தர் போட்ட பதிவானது இருவரும் விவாகரத்து வரை சென்று விட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு கணவருடன் மகாலட்சுமி புகைப்படம் வெளியிட்டு அனைவருடைய வாயையும் அடைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய மனைவி குறித்து ரவீந்தர் பேட்டி ஒன்றில், படபிடிப்பு முடிந்து தாமதமாக வீட்டிற்கு வரும் மகாலட்சுமி இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தனக்கு சமைத்து கொடுத்து விடுவார். சில சமயங்களில் சண்டை கூட வந்துள்ளது. அப்போது தான் நடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்பார். தன்னுடைய அம்மாவிற்கு மகாலட்சுமிக்கும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தும் இதுவரை என்னுடைய அம்மாவை பற்றி எதுவும் என்னிடம் கூறியதில்லை என்று கூறியுள்ளார்.