
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் நடிகர் ரவிதேஜா நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் சினிமாவில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீலிலா ஸ்ரீ ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்ற திரைப்படத்திலும் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை ஜெனிலியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு படத்தில் ஹீரோவாக கீர்த்தி ரெட்டி நடிக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
A CELEBRATION OF YOUTH, ENERGY & NEXT LEVEL ENTERTAINMENT ❤🔥#JuniorTeaser out now!
Telugu 🔗 https://t.co/bxdvdPAqWQ
Kannada 🔗 https://t.co/pRFvESeOibIn cinemas July 18th.
A Rockstar @ThisIsDSP musical 🎸🔥#Junior pic.twitter.com/XRIORbOqK9
— Vaaraahi Chalana Chitram (@VaaraahiCC) June 27, 2025