
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மற்றும் தற்போதைய சூப்பர் ஸ்டார் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் உலகில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். தோனி மற்றும் விராட் கோலியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடர்ந்துகொண்டு இருந்தாலும், கடந்த காலத்தில் காதல் தோல்விகளை சந்தித்தனர். தோனி, நடிகை தீபிகா படுகோனே, ராய் லட்சுமி, மற்றும் அசினுடன் காதல் கொண்டதாக கூறப்பட்டது.
தோனி தனது நண்பர் யுவராஜ் சிங்கிற்காக தீபிகாவுடனான உறவை முடித்துக்கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல, விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், நடிகை சஞ்சனா கல்ராணி உடன் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஒரு ஸ்மார்ட்போன் விளம்பர படப்பிடிப்பில், நடிகை தமன்னாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் விராட் பின்னர் பிரேசிலிய நடிகை இசபெல் லெயிடுடன் டேட்டிங் செய்ததாக தகவல்கள் வெளியானது.
இசபெல், “விராட் இந்தியாவில் எனக்குக் கிடைத்த முதல் நண்பர், ஆனால் நாங்கள் நம் உறவை பொதுவெளியில் வெளிப்படுத்த விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார். ஆனால், எதற்காக காதல் முறிந்தது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இன்று, விராட் அனுஷ்கா சர்மாவை மணந்து மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார், அதேபோல் தோனியும் சாக்ஷியை மணந்து மகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர்ந்து வருகிறார்.