தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நல்லகண்ணு வை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தீபாவளி பண்டிகையின் போது போனஸ், காலில் செருப்பு அணிவது, எட்டு மணி நேர வேலை போன்றவைகள் எல்லாம் ஐயா நல்ல கண்ணு ரத்தம் சிந்தி பெற்று தந்தது. இதனால் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். விடுதலைப் போராட்ட வீரர் ஆன நல்ல கண்ணுவின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று இந்த சமயத்தில் தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த கோரிக்கை தொடர்பாக தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், விடுதலைப் போராட்ட வீரர் மதிப்புக்குரிய ஐயா நல்ல கண்ணுவின் வாழ்க்கை வரலாறு பற்றி பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் அவரின் வாழ்க்கை வரலாறு குறிப்பை பள்ளி புத்தகத்தில் இடம் பெற செய்வது தொடர்பாக தமிழக முதல்வரின் ஆலோசனை கேட்டு  முடிவு செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார்.