நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி (75) வயது மூப்பு காரணமாக காலமானார். 1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1980 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரை மேலூரில் வசித்து வந்த மூத்த சகோதரி புஷ்பவதி நேற்று காலமானார். இவருடைய மறைவை தொடர்ந்து நடிகர் ராமராஜனுக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.