தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகுல் ரவிந்திரன். இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மனைவி பிரபல பாடகி சின்மயி. இந்நிலையில் நடிகர் ராகுல் ரவீந்திரனின் தந்தை ரவீந்திரன் மரணம் அடைந்து விட்டதாக தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதாவது அவருடைய தந்தை உடல் நல குறைவினால் இறந்துவிட்டார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர் என் அப்பாவின் இழப்பை எப்போதும் ஈடு செய்ய முடியாது. அவர் என்றென்றும் என் நினைவில் வாழ்வார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.