
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் படங்கள் அனைத்தும் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பெரும் வெற்றி பெற்றதோடு இவர்களுக்கு இரு மொழிகளிலும் அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
இவர்கள் இணைந்து நடித்த படங்களில் ஒன்றில் மோகன்லாலுக்கு நடிகர் மம்முட்டி அப்பாவாக நடித்துள்ளார். 1982 ஆம் ஆண்டில் “படையோட்டம்” என்ற படத்தை ஜிஜோ புன்னூசி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மம்முட்டி, நடிகை லட்சுமி, மோகன்லால், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் மாமுட்டி மோகன்லாலை விட 9 வயது வித்தியாசத்தில் இருந்ததால் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார்.