தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பல்வேறு தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து உடலுக்கு நடிகர் எஸ்ஜே சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்த்தித்த அவர், மிகவும் நல்ல மனிதர், சிரிக்க வைக்கக் கூடியவர். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் வசந்த்திடம் எஸ்ஜே சூர்யா மற்றும் மாரிமுத்துவும் துணை இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். அதே சமயம் எஸ்ஜே சூர்யாவிடமும் மாரிமுத்து உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.